மார்பகப் புற்றுநோய் சிகிச்சைக்குப் பிறகு ஒரு மார்பகம் அகற்றப்பட்டிருந்தாலும், ஆரோக்கியமாக இருக்கும் மற்றொரு மார்பகத்தின் மூலம் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க முடியும் என்று மருத்துவ நிபுணர்கள் விளக்கியுள்ளனர்.
கதிர்வீச்சு சிகிச்சை காரணமாக திசுக்களில் இறுக்கம் (fibrosis) ஏற்பட்டு பால் சுரப்பது குறைந்தாலும், தாய்ப்பாலில் புற்றுநோய் செல்கள் கலந்து குழந்தைக்கு பாதிப்பு ஏற்படும் என்ற கருத்து தவறானது என்று தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
கீமோதெரபி மற்றும் tamoxifen போன்ற ஹார்மோன் சிகிச்சை மருந்துகள் தாய்ப்பாலில் கலக்க வாய்ப்புள்ளதால், சிகிச்சை காலத்தில் தாய்ப்பால் கொடுப்பதைத் தவிர்த்து மருத்துவர்களின் ஆலோசனையைப் பெற வேண்டும்.