/polimer-news/media/media_files/2026/10/24/vlcsnap-2026-10-24-13h41m20s830-2026-10-24-13-45-41.png)
கரூர் மாவட்டம் குளித்தலை சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்த கனமழையால் கட்டளை கிராமத்தில் சுமார் 500 ஏக்கர் நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கின.
ஆயிரம் ஏக்கர் நாற்றங்கால்களும் தண்ணீரில் மூழ்கியுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.
மதிகெட்டான் மற்றும் வெடுக்கட்டான் பாசன வடிகால் வாய்க்கால்களை தூர்வாராததே இதற்குக் காரணம் எனக் கூறி அவற்றை போர்க்கால அடிப்படையில் தூர்வாருமாறு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.