
பிரபு மற்றும் சுகன்யா ஜோடி 31 ஆண்டுகளுக்குப் பிறகு ‘மேரி கோல்டு’ திரைப்படத்தில் மீண்டும் இணைந்து நடிக்கின்றனர்.
பிரியன் ராஜேந்திரன் இயக்கும் இப்படத்தில் ரக்ஷன், நம்ரிதா, சிங்கம் புலி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி நகரங்களின் வாழ்வியலை மையமாகக் கொண்ட உணர்வுப்பூர்வமான குடும்பக் கதையாக இப்படம் உருவாகிறது.