
UPTET 2026 தேர்வு முடிவுகள் இன்று (ஆகஸ்ட் 27) upessc.up.gov.in இணையதளத்தில் வெளியிடப்பட்ட நிலையில், பேப்பர் 1-ல் 80.07 சதவீதமும், பேப்பர் 2-ல் 71.85 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
மொத்தம் 19,94,661 பேர் பதிவு செய்திருந்த இந்தத் தேர்வு, 60 மாவட்டங்களில் 5 ஷிஃப்டுகளாக நடத்தப்பட்டு, நார்மலைசேஷன் முறைப்படி முடிவுகள் தயார் செய்யப்பட்டுள்ளன.
தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஆயுள் முழுமைக்கும் செல்லுபடியாகும் தகுதிச் சான்றிதழ் வழங்கப்படும் என்றும், அடுத்தகட்டமாக ஆசிரியர் பணி நியமனங்கள் குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.