
விவசாயக் கழிவான பச்சை தேங்காய் நாரில் லிக்னினுடன் நைட்ரஜன், ஹைட்ரஜன் சேர்த்து அதன் பண்பை மாற்றி குறைந்த செலவில் மாசுபட்ட நீரை சுத்தம் செய்யும் புதிய வழி கண்டறியப்பட்டுள்ளது.
ராயல் சொசைட்டி ஆஃப் கெமிஸ்ட்ரி ஆராய்ச்சியின்படி, 30°C வெப்பநிலையில் 80 நிமிடங்களில் 95.5 சதவீத காங்கோ சிவப்புச் சாயத்தை இந்த முறையின் மூலம் நீக்க முடியும் என்று கண்டறியப்பட்டுள்ளது.
இந்த முறையானது விவசாயக் கழிவு மற்றும் தொழிற்சாலை சாயக்கழிவு ஆகிய இரண்டு சுற்றுச்சூழல் பிரச்சினைகளுக்கு எளிய தீர்வாக அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.