
தவெக அரசு தாக்கல் செய்த முதல் பட்ஜெட்டில் திமுக மற்றும் அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட பல்வேறு திட்டங்களின் பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.
அண்ணல் அம்பேத்கர் அயலக உயர் கல்வி உதவித் தொகை திட்டம் 131 கோடி ரூபாயுடனும், வெற்றி தொழில் முனைவோர் திட்டம் 75 கோடி ரூபாயுடனும் மாற்றப்பட்டுள்ளன.
திமுகவின் காலை உணவுத் திட்டம் 'பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு திட்டம்' என மாற்றப்பட்டு, தாலிக்கு தங்கம் திட்டம் 'அண்ணனின் சீர்' என மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.