
சொகுசு கார் தயாரிப்பு நிறுவனமான பிஎம்டபுள்யூ, 2027-ம் ஆண்டுக்குள் ஜெர்மனியில் சுமார் 8,000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்ய உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
மின்சார வாகனங்களுக்கான அதிக செலவு, சீனாவுடனான போட்டி மற்றும் அமெரிக்காவின் கூடுதல் வரி விதிப்பு ஆகியவற்றால் ஜெர்மனியின் வாகன உற்பத்தித் துறை கடும் நெருக்கடியைச் சந்தித்து வருகிறது.
நிர்வாகம் மற்றும் ஆராய்ச்சி-மேம்பாட்டு பிரிவுகளை இலக்காகக் கொண்டு இந்த ஆட்குறைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகவும், உற்பத்திப் பிரிவுக்கு இதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாகவும் நிறுவனம் தெரிவித்துள்ளது.