
சாதி, மதமற்றவர் எனச் சான்றிதழ் கோரி விண்ணப்பிப்பவர்களுக்குச் சட்டம் அல்லது அரசாணை பிறப்பிக்க உத்தரவிடக் கோரி நடிகர் பார்த்திபன் பொதுநல வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
கடந்த 2025 ஜூன் மாதம் உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு கிடப்பில் போடப்பட்டதாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த மனு குறித்து நான்கு வாரங்களுக்குள் பதிலளிக்க உள்துறை, வருவாய்த்துறை மற்றும் சட்டத்துறை செயலாளர்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.