
இந்தியா மற்றும் ரஷியா மகளிர் கால்பந்து அணிகள் இடையிலான 2-வது சர்வதேச நட்புறவு ஆட்டத்தில் இந்திய அணி 0-8 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தது.
கொல்கத்தாவில் நடைபெற்ற இந்தப் போட்டியில் ரஷிய வீராங்கனைகள் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தி அடுத்தடுத்து கோல்களை அடித்து அபார வெற்றி பெற்றனர்.
முன்னதாக நடைபெற்ற முதல் நட்புறவு ஆட்டத்திலும் ரஷியா 4-0 என்ற கோல் கணக்கில் இந்தியாவை வீழ்த்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.