
ஊடகவியலாளர் பிரபாகரன் டிலக்சன் அரச ஆதரவுடன் அச்சுறுத்தப்படுவதை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் கனகரத்தினம் சுகாஷ் வன்மையாகக் கண்டித்துள்ளார்.
வடமராட்சியில் தேசிய மக்கள் சக்தியின் பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் சிசிடிவி கேமராவைச் சேதப்படுத்திய வழக்கில், பொலிஸார் அவரை 24 மணி நேரத்திற்குள் நீதிமன்றத்தில் முற்படுத்தாமல் விடுவித்தது சட்டவிரோதமானது என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஊழலுக்கு எதிராகச் செயல்படுவதாகக் கூறிக்கொண்டு, தங்களுக்கு ஒத்துழைக்காத அதிகாரிகள் மற்றும் ஊடகவியலாளர்களை இலக்கு வைப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.