
தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜயை மிரட்டும் வகையில் பேசியதாகக் கைது செய்யப்பட்ட விளாத்திகுளம் திமுக எம்.எல்.ஏ மார்க்கண்டேயனின் ஜாமீன் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் விசாரித்தது.
கடந்த ஜூலை 20-ம் தேதி கைது செய்யப்பட்ட மார்க்கண்டேயன், தூத்துக்குடி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஜாமீன் கோரிய நிலையில், அது கடந்த ஜூலை 22-ம் தேதி தள்ளுபடி செய்யப்பட்டது.
இன்று நடைபெற்ற விசாரணையில், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கவில்லை என மனுதாரர் தரப்பும், சட்டப்படியே கைது செய்யப்பட்டதாக அரசு தரப்பும் வாதங்களை முன்வைத்தன.