
ஆதார் அட்டையில் முகவரி மாற்றத் தேவையான வழக்கமான ஆவணங்கள் இல்லாதவர்கள், அரசு அதிகாரிகளிடம் புகைப்படத்துடன் கூடிய சான்றிதழ் பெற்று விண்ணப்பிக்கலாம்.
நாடாளுமன்ற உறுப்பினர், சட்டப்பேரவை உறுப்பினர், அரசிதழ் பதிவு பெற்ற அதிகாரி அல்லது வட்டாட்சியர் ஆகியோரிடம் அதிகாரப்பூர்வ கடிதத் தலைப்பில் இந்தச் சான்றிதழைப் பெற முடியும்.
பாஸ்போர்ட், பான் கார்டு, மின்சாரக் கட்டண ரசீது அல்லது சொத்து வரி ரசீது போன்ற 13 வகையான ஆவணங்களை முகவரிச் சான்றாக யுஐடிஏஐ ஏற்றுக்கொள்கிறது.