
ஈரானுடனான பேச்சுவார்த்தை நேர்மறையான பாதையில் செல்வதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு அடுத்த 48 மணி நேரத்திற்குள் வெளியாக வாய்ப்புள்ளதாக அவர் லாஸ் ஏஞ்சலஸில் செய்தியாளர்களிடம் கூறினார்.
ஒப்பந்தத்தின்படி வளைகுடா கப்பல் போக்குவரத்துக் கட்டணம் ரத்து செய்யப்படுவதுடன், கடல் கண்ணிவெடிகளை அகற்ற ஈரான் மற்றும் ஓமன் இணைந்து செயல்படும்.