
பிலிப்பைன்ஸைச் சேர்ந்த 15 வயது மாணவர் ஏஞ்சலோ காசிமிரோ, நடக்கும்போது மின்சாரத்தை உருவாக்கும் 'ஸ்மார்ட் காலணிகளை' பீசோஎலக்ட்ரிசிட்டி தொழில்நுட்பத்தில் வடிவமைத்துள்ளார்.
இந்த காலணியின் குதிப்பகுதியில் உள்ள அழுத்த உணர் ஜெனரேட்டர்கள் மூலம் மின்சாரம் தயாரிக்கப்பட்டு, சிறிய மின்னணு சாதனங்களை சார்ஜ் செய்ய உதவுகிறது.
சுமார் 8 மணிநேரம் ஜாக்கிங் செய்வதன் மூலம் 400 mAh பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்ய முடியும் என இந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.