
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் சலாடோ பகுதியில் ராணுவத்தின் அபாச்சி ரக ஹெலிகாப்டர் வயல்வெளியில் விழுந்து வெடித்துச் சிதறியதில் 2 வீரர்கள் உயிரிழந்தனர்.
விபத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் 100 ஏக்கர் பரப்பளவிலான புற்கள் கருகிய நிலையில், தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
விபத்துக்கான காரணம் குறித்து ராணுவம் விசாரணை நடத்தி வருவதாகவும், உயிரிழந்த வீரர்களின் விவரங்கள் உறவினர்களுக்குத் தெரிவிக்கப்பட்ட பின் வெளியிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.