
காமன்வெல்த் டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் லீக் ஆட்டத்தில், இந்திய மகளிர் அணி 3-2 என்ற கணக்கில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி வெற்றி பெற்றது.
சுதீர்த்தா முகர்ஜி மற்றும் யஷஸ்வினி கோர்படே ஆகியோர் தங்களின் ஆட்டங்களில் வெற்றி பெற்று, இந்தியாவுக்கு வெற்றியைத் தேடித்தந்தனர்.
ஏற்கனவே இலங்கையை 3-0 என்ற கணக்கில் வீழ்த்தி பதக்க சுற்றை உறுதி செய்துள்ள இந்திய அணி, நாளை கனடாவுடன் மோதவுள்ளது.