
தமிழகத்தில் இளநிலைப் பொறியியல் படிப்பிற்கான 3-ஆம் சுற்றுக் கலந்தாய்வில் 56,294 மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தொழில்நுட்ப இயக்குநரகம் தெரிவித்துள்ளது.
இறுதி ஒதுக்கீடு பெற்ற 48,501 மாணவர்கள் ஆகஸ்ட் 27-ஆம் தேதிக்குள் கல்லூரிகளில் அசல் சான்றிதழ்களைச் சமர்ப்பித்து கல்விக் கட்டணத்தைச் செலுத்தி சேர்க்கையைப் பெற வேண்டும்.
மேலும் 6,183 மாணவர்கள் தற்காலிக ஒதுக்கீட்டை உறுதி செய்துவிட்டு, விருப்பமான மற்ற கல்லூரிகளுக்கு 'அப்வேர்டு' செய்துள்ளதால் அவர்களும் ஆகஸ்ட் 27-க்குள் சேர்க்கை நடைமுறைகளை முடிக்க வேண்டும்.