
ஆசிய விளையாட்டுப் போட்டியில், வாடகை கார் ஓட்டுநராக இருந்த சல்மான் கான், படகுப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.
சல்மான் கான் மற்றும் சத்நாம் சிங் ஜோடி 2000 மீட்டர் துடுப்பு படகுப் போட்டியில் 6 நிமிடங்கள் 13 விநாடிகளில் இலக்கைக் கடந்து 3வது இடத்தைப் பிடித்தனர்.
குடும்பத்தைக் காப்பாற்ற ராணுவ கனவை விட்டுவிட்டு வாடகை கார் ஓட்டிய சல்மான், பின்னர் ராணுவத்தில் சேர்ந்து படகுப் போட்டியில் சாதனை படைத்துள்ளார்.