2013-ம் ஆண்டு பெண் பத்திரிகையாளரை பாலியல் துன்புறுத்தல் செய்த வழக்கில், தெஹல்கா இதழ் நிறுவனர் தருண் தேஜ்பால் குற்றவாளி என மும்பை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கோவா செஷன்ஸ் நீதிமன்றம் 2021-ம் ஆண்டு அவரை விடுவித்திருந்த நிலையில், கோவா அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த மும்பை உயர் நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.
குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ள 62 வயதான தருண் தேஜ்பாலுக்கு, குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் முதல் ஆயுள் தண்டனை வரை கிடைக்க வாய்ப்புள்ளதாக வழக்கறிஞர்கள் தெரிவிக்கின்றனர்.