
தமிழகத்தில் கல்வி நிலையங்கள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் பேருந்து நிலையங்களுக்கு அருகில் இயங்கும் 129 டாஸ்மாக் கடைகளை உடனடியாக மூட முதல்வர் விஜய்க்கு அண்ணாமலை கடிதம் எழுதியுள்ளார்.
வீ தி லீடர்ஸ் அமைப்பின் சார்பில் தமிழகம் முழுவதும் நடத்தப்பட்ட கள ஆய்வின் அடிப்படையில், இந்த 129 கடைகள் 500 மீட்டர் சுற்றளவிற்குள் அமைந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, ஜூலை 12 அன்று பொள்ளாச்சியில் முதல் மாநாட்டை நடத்திய அண்ணாமலை, தற்போது இந்த பட்டியலை வெளியிட்டுள்ளார்.