
நீட் தேர்வை கண்டித்து ஆகஸ்ட் 22-ம் தேதி முதல் தமிழகத்தில் 6 இடங்களில் இருசக்கர வாகனப் பேரணி நடத்தப்படும் என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அறிவித்துள்ளார்.
ராஜபாளையத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், ரூ.100 கோடி மதிப்பில் பெரியார் உலகம் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும், அதன் பணிகள் 150-வது பிறந்தநாள் விழாவிற்குள் நிறைவடையும் என்றும் கூறினார்.
நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையைப் பயன்படுத்தி அரசியல் சட்டத்தை மாற்றி மனு தர்மத்தைக் கொண்டு வர முயற்சி நடப்பதாக அவர் குற்றம் சாட்டினார்.