
2027 ஐபிஎல் சீசனுக்கு முன்னதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய பந்துவீச்சு பயிற்சியாளராக முன்னாள் இந்திய வேகப்பந்து வீச்சாளர் மோஹித் சர்மா நியமிக்கப்பட உள்ளார்.
புதிய தலைமை பயிற்சியாளராக பொறுப்பேற்றுள்ள ஜாகீர் கானின் பரிந்துரையின் பேரில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக சிஎஸ்கே தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் உறுதிப்படுத்தியுள்ளார்.
ஹரியானாவைச் சேர்ந்த 38 வயதான மோஹித் சர்மா, கடந்த டிசம்பர் மாதம் அனைத்து வகையான கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வுபெற்றது குறிப்பிடத்தக்கது.