
கொழும்பில் நடந்த 3 நாள் பயிற்சி போட்டியில், இலங்கை கிரிக்கெட் போர்டு லெவன் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வீழ்த்தியது.
இலங்கை அணி நிர்ணயித்த 207 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணியில், ஜெய்ஸ்வால் 61 ரன்கள் எடுத்து ரிட்டயர்டு ஹர்ட் ஆனார், சிராஜ் கடைசி ஓவரில் ஹாட்ரிக் சிக்சர் அடித்து வெற்றியை உறுதி செய்தார்.
வலது கால் பெருவிரல் காயத்தால் தமிழக வீரர் சாய் சுதர்சன் டெஸ்ட் தொடரிலிருந்து விலகிய நிலையில், அவருக்குப் பதிலாக 6 டெஸ்டுகளில் 371 ரன்கள் எடுத்துள்ள சர்பராஸ் கான் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.