
மேகதாதுவில் புதிய அணை கட்டுவது தொடர்பாக காங்கிரஸ் எம்.பி. சுதா எழுப்பிய கேள்விக்கு, மத்திய ஜல் சக்தித் துறை எழுத்துப்பூர்வமாகப் பதிலளித்துள்ளது.
கீழ்மடை மாநிலங்களான தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியின் ஒப்புதல் மற்றும் சுற்றுச்சூழல் அனுமதியின்றி காவிரியின் குறுக்கே புதிய திட்டங்களைச் செயல்படுத்த முடியாது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மத்திய நீர் ஆணையத்தின் இறுதி ஒப்புதலுடன் கூடிய விரிவான திட்ட அறிக்கை தாக்கல் செய்யப்படாமல், கர்நாடக அரசு புதிய கட்டுமானப் பணிகளைத் தொடங்க சட்டப்படி அனுமதி இல்லை.