
திமுக ஈரோடு மத்திய மாவட்ட பொறுப்பாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம், கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகினார்.
2011-2016 அதிமுக ஆட்சியில் வருவாய்த்துறை அமைச்சராக இருந்த இவர், ஜூலை 2021-ல் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்திருந்தார்.
தற்போது எந்த இயக்கத்திலும் சேரும் எண்ணம் இல்லை என்று கூறியுள்ள அவர், தனது விலகல் கடிதத்தை மு.க. ஸ்டாலினுக்கு அனுப்பியுள்ளதாக செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.