
ஆசியாவின் சக்தி வாய்ந்த டாப் 10 வர்த்தக பெண்மணிகள் இடம்பெறும் 'பார்ச்சூன் 2026' பட்டியலில் எச்.சி.எல். டெக் தலைவர் ரோஷிணி நாடார் மல்ஹோத்ரா எட்டாவது இடத்தைப் பிடித்துள்ளார்.
சிங்கப்பூரைச் சேர்ந்த டிபிஎஸ் வங்கியின் தலைமை நிர்வாக அதிகாரி டான் சு ஷான் இந்தப் பட்டியலில் முதலிடத்தைப் பெற்றுள்ளார்.
இந்தத் தரவரிசைப் பட்டியலில் தொழில்நுட்பம், வாகன உற்பத்தி மற்றும் நிதிச் சந்தை சார்ந்த துறைகளைச் சேர்ந்த பெண்மணிகளே பெரும்பான்மையாக ஆதிக்கம் செலுத்துகின்றனர்.