
டி ஆண்டனி எழுதி, இயக்கி, தயாரித்து நடித்துள்ள 'ஏன் என்னை ஏதோ செய்தாய்' திரைப்படம் செப்டம்பர் 4-ம் தேதி வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
மதுப்பழக்கத்திற்கு அடிமையான ஒரு இளைஞனின் வாழ்க்கையில் காதல் ஏற்படுத்தும் மாற்றத்தை மையமாகக் கொண்ட இந்தத் திரைப்படம், லைவ் சவுண்ட் தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.
இப்படத்தில் மதுமிதா தாஸ், ஜீவா ரவி உள்ளிட்டோர் நடித்துள்ள நிலையில், ஜெய்கார் ஹரிநாத் மற்றும் அசோக் ஸ்ரீதரன் இசையமைத்துள்ளனர்.