
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலங்களை தேசிய மின்கட்டமைப்புடன் அதிகளவில் இணைப்பதன் மூலம் எதிர்காலத்தில் மின் கட்டணத்தை படிப்படியாகக் குறைக்க முடியும் என இலங்கை எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
2030-ஆம் ஆண்டுக்குள் மின் கட்டணத்தை 30 சதவீதம் வரை குறைப்பதும், தேசிய மின்கட்டமைப்பில் சுமார் 70 சதவீதம் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை இணைப்பதும் இலக்காகும்.
பகல் நேரத்தில் சூரிய சக்தி மூலம் உற்பத்தியாகும் அதிகப்படியான மின்சாரத்தை பேட்டரிகளில் சேமித்து, இரவு நேரத்தில் தேசிய மின்கட்டமைப்புக்கு வழங்கும் திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.