
திருமதி செல்வம் தொடரில் 'பூங்காவனம்' கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமான நடிகர் வி.சி.ஜெயமணி, மாரடைப்பு காரணமாக சென்னையில் காலமானார்.
இவர் சிறகடிக்க ஆசை, மெட்டி ஒலி, கல்யாணப் பரிசு உள்ளிட்ட பல தொடர்களிலும், 150-க்கும் மேற்பட்ட தமிழ்த் திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
நடிகராக மட்டுமன்றி சின்னத்திரை தொடர்களில் இயக்குநராகவும் பணியாற்றிய அனுபவம் கொண்ட இவரது மறைவுக்கு சின்னத்திரை நட்சத்திரங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.