
சென்னை கிண்டியில் நடைபெற்ற 'வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு 2026'-ல் முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் முன்னிலையில் ரூ.67,452 கோடி மதிப்பிலான முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன.
2036-ம் ஆண்டிற்குள் தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை 1.5 டிரில்லியன் அமெரிக்க டாலராக உயர்த்த வேண்டும் என்ற இலக்கை முதலமைச்சர் விஜய் நிர்ணயித்துள்ளார்.
இந்த முதலீடுகள் மூலம் இராமநாதபுரம் போன்ற மாவட்டங்களில் உள்ள இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டு, பொருளாதார சுதந்திரம் உறுதி செய்யப்படும் என அமைச்சர் கீர்த்தனா தெரிவித்தார்.