
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணி 312 மில்லியன் டாலர் (சுமார் ரூ.2,984 கோடி) பிராண்ட் மதிப்புடன் ஐபிஎல் அணிகளில் முதலிடத்தைப் பிடித்துள்ளது.
ஹூலிஹான் லோகி அறிக்கையின்படி, ஆர்சிபி பிராண்ட் மதிப்பு கடந்த ஆண்டை விட 16 சதவீதம் உயர்ந்து, 300 மில்லியன் டாலர் மைல்கல்லைக் கடந்த முதல் கிரிக்கெட் அணியாக மாறியுள்ளது.
மும்பை இந்தியன்ஸ் (264 மில்லியன் டாலர்), கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (245 மில்லியன் டாலர்) மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் (244 மில்லியன் டாலர்) அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.