
இங்கிலாந்துக்கு எதிரான லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் காயத்தைக் காரணம் காட்டி இரு இன்னிங்ஸ்களிலும் பேட்டிங் செய்யாத இமாம் உல் ஹக் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆகிப் ஜாவேத் உறுதியளித்துள்ளார்.
போட்டியின் போது காயமடைந்ததாகக் கூறப்பட்டாலும், நான்காம் நாள் காலையில் அவர் உடற்பயிற்சியில் ஈடுபட்டது ரசிகர்களிடையே கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியது.
இந்தத் தோல்விக்குப் பிறகு தாயகம் திரும்புமாறு அழைக்கப்பட்ட 7 வீரர்களில் இமாம் உல் ஹக்கும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.