
மேற்கு ஆசியாவில் அமெரிக்கா-ஈரான் போர் தீவிரமடைந்ததில் இருந்து 10 மாலுமிகள் உட்பட 16 இந்தியர்கள் உயிரிழந்துள்ளதாக மத்திய அரசு மாநிலங்களவையில் தெரிவித்துள்ளது.
உயிரிழந்தவர்களில் ஓமனில் 8 பேர், ஐக்கிய அரபு அமீரகத்தில் 4 பேர், குவைத்தில் 2 பேர், சவுதி அரேபியாவில் ஒருவர் மற்றும் ஈராக்கில் ஒருவர் அடங்குவர்.
பிப்ரவரி 2026 முதல் டெஹ்ரானில் உள்ள இந்தியத் தூதரகம் மூலம் 2,557 இந்தியர்கள் ஆர்மீனியா மற்றும் அஜர்பைஜான் வழியாக தாயகம் அழைத்து வரப்பட்டுள்ளனர்.