
சாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் குளறுபடிகளைத் தவிர்க்க, இதர பிற்படுத்தப்பட்டோர் (OBC) உரிமைகளைப் பாதுகாக்க தமிழ்நாடு அரசு சிறப்புத் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
ஒன்றிய அரசின் தற்போதைய கணக்கெடுப்பு முறையில் சாதிப் பெயர்களைப் பதிவேற்றுவது குழப்பத்தை ஏற்படுத்தும் என்றும், இதனால் 46 லட்சம் சாதிகள் இருப்பதாகத் தவறான புள்ளிவிவரம் வரும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
மக்கள்தொகைக் கணக்கெடுப்புக்காகச் செலவிடப்படும் 12 ஆயிரம் கோடி ரூபாயும், அரசு ஊழியர்களின் உழைப்பும் வீணாகாமல் இருக்க, மாநில அரசுகளின் பட்டியலைப் பயன்படுத்தி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என அவர் கோரியுள்ளார்.