
சீனாவில் நடந்துவரும் ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியின் ஒற்றையர் பிரிவின் 4-வது சுற்றில் முன்னாள் நம்பர் ஒன் வீரரான டேனில் மெட்விடேவ் 6-4, 7-5 என்ற நேர் செட் கணக்கில் சிட்சிபாசை வீழ்த்தினார்.
இதன் மூலம் மெட்விடேவ் 4-வது முறையாக காலிறுதியை எட்டியுள்ளதுடன், அடுத்து அமெரிக்காவின் டாமி பாலை எதிர்கொள்கிறார்.
மற்றொரு ஆட்டத்தில் ஸ்பெயின் வீரர் ரபெல் ஜோடர் வெற்றி பெற்ற நிலையில், நார்வே வீரர் கேஸ்பர் ரூட்டுக்கு எதிரான ஆட்டத்தில் கனடாவின் ஆகர் அலியாசிம் கால்முட்டி காயத்தால் விலகினார்.