தவெக அரசு சர்க்கார் நடத்துகிறதா அல்லது சர்க்கஸ் கம்பெனி நடத்துகிறதா என எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் கடுமையாக விமர்சித்துள்ளார்.
திமுக ஆட்சியில் 11.19 சதவீத வளர்ச்சியோடு இருந்த தமிழகம், தற்போது தவெக ஆட்சியில் பாதாளத்திற்குச் சென்றுவிட்டதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் வழங்க நிதி இல்லை என்று கூறும் முதல்வர் விஜய், எம்எல்ஏக்களுக்கு கார் வாங்க மட்டும் நிதி ஒதுக்கியது ஏன் என உதயநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.