
இந்தியா வந்துள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கும் நிலையில், முதல் போட்டி இன்று கேரளாவின் திருவனந்தபுரத்தில் உள்ள கிரீன்பீல்டு சர்வதேச மைதானத்தில் நடைபெறுகிறது.
ஐசிசி ஒருநாள் ரேங்கிங் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் உள்ளதோடு, சீனியர் வீரர்களான ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் 2027 உலக கோப்பை தொடரில் இடம்பெற விரும்புகின்றனர்.
விராட் கோலி இதுவரை 314 போட்டிகளில் 14,941 ரன்கள் எடுத்துள்ள நிலையில், இன்னும் 59 ரன்கள் எடுத்தால் ஒருநாள் அரங்கில் 15,000 ரன்களை எட்டிய இரண்டாவது இந்திய வீரர் என்ற மைல்கல்லை எட்டலாம்.