
தமிழகத்தில் அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய் போன்ற அத்தியாவசியப் பொருட்களின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் ஏழை மற்றும் நடுத்தரக் குடும்பங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
அக்டோபர் மாதத்தில் அரிசி மூட்டைக்கு ரூ.300 முதல் ரூ.600 வரையிலும், சன்ன ரக அரிசி கிலோ ரூ.75 முதல் ரூ.85 வரையிலும் உயர்ந்ததாகவும், பதுக்கல் மற்றும் செயற்கை விலை உயர்வை அரசு தடுக்கவில்லை என்றும் அவர் குற்றம்சாட்டினார்.
எனவே, வெறும் கண்காணிப்பு என்று கூறாமல், எப்போது விலை உயர்வைக் கண்டறிந்தது, யார் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பதற்கான முழுமையான கணக்கை தமிழக அரசு வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.