
அரசு நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்தை கடைசியில் பாட வேண்டும் என்று மத்திய அரசு வற்புறுத்தவில்லை என சென்னை உயர் நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது.
தேசிய கீதம் மற்றும் வந்தே மாதரம் பாடல்களுக்குப் பிறகு தமிழ்த்தாய் வாழ்த்தைப் பாட வேண்டும் என்ற கட்டாயம் இல்லை என மத்திய அரசு தனது நிலைப்பாட்டை நீதிமன்றத்தில் தெளிவுபடுத்தியுள்ளது.
இந்த வழக்கு தொடர்பான விசாரணையை அடுத்த வாரத்திற்குத் தள்ளிவைத்து தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டுள்ளது.