
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரை, ஒரு போட்டி எஞ்சியுள்ள நிலையில் 2-0 என்ற கணக்கில் தென் ஆப்பிரிக்கா கைப்பற்றியது.
ஜோகன்னஸ்பர்க்கில் நடந்த 2-வது போட்டியில் தென் ஆப்பிரிக்கா 365 ரன்கள் குவித்தது; இதில் கேப்டன் பவுமா 103 ரன்களும், டேவிட் மில்லர் 142 ரன்களும் எடுத்து அசத்தினர்.
இலக்கை விரட்டிய ஆஸ்திரேலியா கடைசி ஓவரில் 333 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது, இதன் மூலம் தென் ஆப்பிரிக்கா 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.