
தவெக ஆட்சிக்கு வந்த பிறகு குழந்தைகள் மற்றும் பெண்கள் மீதான வன்முறை அதிகரித்துக்கொண்டு இருப்பதாக சென்னையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் திமுக எம்பி கனிமொழி தெரிவித்தார்.
முதலமைச்சர் கவனிக்கும் காவல் துறையில் குற்றச் சம்பவங்களைக் குறைப்பதற்கோ தடுத்து நிறுத்துவதற்கோ எந்த நடவடிக்கையும் இல்லை என்று அவர் குற்றம் சாட்டினார்.
தாராபுரம் நாதக வேட்பாளர் கார்த்திகாவை இரவு உடையில் அதிகாலையில் கைது செய்ததைக் கண்டித்த அவர், நயினார் நாகேந்திரனை கைது செய்ய தவெக அரசுக்கு தைரியம் இல்லையா என்றும் கேள்வி எழுப்பினார்.