
மாருதி சுசூகி நிறுவனம் தனது சொந்த சீரிஸ் ஹைப்ரிட் தொழில்நுட்பத்துடன் கூடிய புதிய எஸ்யுவி காரை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளது.
இந்த கார் 1.2 லிட்டர் Z12E பெட்ரோல் இன்ஜினைப் பயன்படுத்தி, லிட்டருக்கு 30 கி.மீ முதல் 40 கி.மீ வரை மைலேஜ் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
2026-ம் ஆண்டின் பிற்பகுதியிலோ அல்லது 2027-ம் ஆண்டின் தொடக்கத்திலோ சந்தைக்கு வரவுள்ள இந்த காரின் விலை ரூ.9.5 லட்சம் முதல் ரூ.13.5 லட்சம் வரை இருக்கலாம்.