Economy
இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு 74,080.3 கோடி டாலராக உயர்ந்து புதிய உச்சம்

இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு 74,080.3 கோடி டாலராக உயர்ந்து புதிய உச்சம்

Dinamani1h
THE BRIEF
1

ஆகஸ்ட் 28-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு 1,147.5 கோடி டாலர் அதிகரித்து, 74,080.3 கோடி டாலராக வரலாற்று உச்சத்தை எட்டியுள்ளது.

2

முக்கிய அங்கமான அந்நிய நாணய சொத்துகள் 933.7 கோடி டாலர் அதிகரித்து 60,067 கோடி டாலராகவும், தங்கம் கையிருப்பு 219.1 கோடி டாலர் அதிகரித்து 11,640.9 கோடி டாலராகவும் உயர்ந்துள்ளது.

3

சிறப்பு வரைவு உரிமைகள் 4.3 கோடி டாலர் குறைந்து 1,881 கோடி டாலராகவும், சர்வதேச நிதியத்தில் இந்தியாவின் கையிருப்பு 1.1 கோடி டாலர் குறைந்து 491.4 கோடி டாலராகவும் பதிவாகியுள்ளது.