பெட்ரோலில் 20% எத்தனால் கலக்கும் E20 திட்டத்தால் வாகனங்களின் மைலேஜ் 2 முதல் 6 சதவீதம் வரை குறையக்கூடும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி மக்களவையில் தெரிவித்தார்.
E20 எரிபொருளில் உள்ள அதிகப்படியான ஈரப்பதம் மற்றும் குளோரைடு பிரச்னையால் வாகன பாகங்கள் பழுதாகுவதாக இந்திய வாகன உற்பத்தியாளர்கள் சங்கம் (SIAM) எச்சரித்துள்ளது.
2025 ஏப்ரல் முதல் அனைத்து பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களும் E20 பெட்ரோலை மட்டுமே விநியோகிப்பதால், பெட்ரோல் பங்குகளில் எத்தனால் கலந்த எரிபொருள் மட்டுமே கிடைக்கிறது.