
திண்டுக்கல் நத்தம் மைதானத்தில் நடைபெற்ற டிஎன்பிஎல் லீக் போட்டியில், சேலம் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி வீழ்த்தியது.
முதலில் பேட்டிங் செய்த சேலம் அணி 20 ஓவர்களில் 182/7 ரன்கள் எடுத்த நிலையில், சேப்பாக்கம் அணி 16.4 ஓவர்களில் 186/5 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
சேப்பாக்கம் அணியின் கேப்டன் நாராயண் ஜெகதீசன் 79 ரன்களும், ஸ்வப்னில் சிங் 45 ரன்களும் குவித்து அணியின் வெற்றிக்கு முக்கியப் பங்காற்றினர்.