
இந்தோனேசியாவில் எல் நினோ தாக்கத்தால் ஜனவரி முதல் ஆகஸ்ட் வரை 3 லட்சம் ஹெக்டர் நிலங்கள் காட்டுத்தீயால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 17 வயது சிறுவன் ருடியன்சா தீயணைப்பு பணியில் ஈடுபட்டுள்ளார்.
பாலங்கரயா பகுதியில் தனது தந்தையுடன் இணைந்து தீயை அணைக்கும் ருடியன்சா, சூப்பர்மேன் உடை அணிந்து பணியாற்றுவது சமூக வலைதளங்களில் வைரலாகி லட்சக்கணக்கான பார்வைகளைப் பெற்றுள்ளது.
வனத்துறை அமைச்சரால் 'வனத்தின் ஹீரோ' என்று பாராட்டப்பட்ட ருடியன்சா, எதிர்காலத்தில் வனத்துறை அதிகாரியாக வேண்டும் என்ற தனது லட்சியத்தை வெளிப்படுத்தியுள்ளார்.