
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெற்ற உலக ஜூனியர் பிளிட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் பிரனவ் கோப்பையைக் கைப்பற்றினார்.
மொத்தம் 13 சுற்றுகள் கொண்ட இந்தப் போட்டியில் அவர் 10.5 புள்ளிகள் பெற்று முதலிடத்தைப் பிடித்தார்.
இதன் மூலம் அவர் உலக ஜூனியர் சாம்பியன் பட்டத்தைத் தன்வசப்படுத்தியுள்ளார்.