
ஆப்பிரிக்க நாடான காங்கோவில் பரவி வரும் எபோலா வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4,018 ஆக அதிகரித்துள்ளதாக அரசு உறுதிப்படுத்தியுள்ளது.
தற்போது வரை 7 மாகாணங்களில் 8,300-க்கும் மேற்பட்டோருக்கு பாதிப்பு உறுதியாகியுள்ள நிலையில், உலக சுகாதார அமைப்பு உலக சுகாதார அவசரநிலையை பிரகடனம் செய்துள்ளது.
பண்டிபக்யோ என்ற வைரஸ் காரணமாக பரவும் இந்த நோய்க்கு தற்போது முறையான தடுப்பூசிகளோ மருந்துகளோ கண்டுபிடிக்கப்படவில்லை.