இந்தியா, ஈராக், குவைத் மற்றும் லெபனான் ஆகிய நாடுகளுக்கு இடையிலான தபால் சேவையை மீண்டும் தொடங்கியுள்ளது.
இந்த நாடுகளுக்கு கடிதங்கள் மற்றும் ஆவணங்களை அனுப்பும் வசதி மீண்டும் செயல்பாட்டுக்கு வந்துள்ளதால், அங்குள்ள இந்தியர்கள் பயனடைவார்கள்.
சர்வதேச உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் இந்திய தபால் துறை இந்த முக்கிய நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.