
இயக்குநர் முத்தையா இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கும் புதிய படத்திற்கு 'இருளன்' எனப் பெயரிடப்பட்டு, அதன் பர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.
இந்தத் திரைப்படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக மிர்ணா மேனன் நடிக்க, சமுத்திரக்கனி மற்றும் ஜான் கொக்கேன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் இணைந்துள்ளனர்.
போர்குடி காவல் இனத்தின் வீர வரலாற்றைப் பேசும் கதையம்சம் கொண்ட இந்தப் படம், அருண் விஜய்யின் திரைப்பயணத்தில் அடுத்த முக்கிய படைப்பாக உருவாகி வருகிறது.